பசறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞர்கள்

பதுளை, பசறை 10ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 02 சடலங்கள் இன்று (31) கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய, சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
28 மற்றும் 33 வயதுகளை மதிக்கத்தக்க இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சடலங்கள் மீது எவ்வித காயங்களும் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.