பல மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது

கொழும்பில் 10 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக . கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய வீடொன்றை சோதனை மேற்கொண்ட போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு லட்சம் ரூபா பணமும் சந்தேகநபர்களிமிருந்து பறிமுதல்
செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
சுமார் 1.05 கிலோகிராம் நிறையுடைய ஹஷிஷ் போதைப்பொருளே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரத்மலானையில் மாதத்திற்கு 30,000 ரூபா வாடகைக்கு விடப்பட்ட வீட்டில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரத்மலானையை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.