ஹட்டனில் 3500 கிலோ கிராம் கழிவு தேயிலையை லொறியில் ஏற்றிச் சென்ற இருவர் கைது

ஹட்டன், மல்லியப்பு பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி 3500 கிலோ கிராம் கழிவு தேயிலையை லொறியொன்றில் ஏற்றிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் ஹட்டன் பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பளை, வெலம்பொட பகுதியிலிருந்து லொறியொன்றில் தலவாக்கலைக்கு கழிவுத் தேயிலையை ஏற்றிச் செல்வதாக ஹட்டன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது அவர்களுக்கு கழிவு தேயிலையை கொண்டு செல்வதற்கான உரிமம் இல்லாமை கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.