யாழில் இரண்டரை வயது சிறுமியின் அசாத்திய திறன் – சாதனைப் புத்தகத்தில் பதிவிட முயற்சி

யாழில் இரண்டரை வயது சிறுமியின் அசாத்திய திறன் – சாதனைப் புத்தகத்தில் பதிவிட முயற்சி

ஆயிரம் தமிழ் சொற்களுக்கு அதன் ஆங்கில அர்த்தங்களை சாதாரணமாக கூறி சாவகச்சேரியை சேர்ந்த இரண்டரை வயது சிறுமி ஒருவர் அசத்தியுள்ளர்.

சிறுமியின் குறித்த அசாத்திய திறனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவதற்கான முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டுள்ளனர்.

சாவகச்சேரியை சேர்ந்த ஜெயகரன் தர்ஷ்விகா என்ற இரண்டரை வயது சிறுமி காலநிலை, விலங்குகள், மின்னியல் சாதனங்கள், தொழில்கள் உள்ளிட்ட 1000 இற்கும் அதிகமான பெயர்களை தமிழில் கேட்கும் போது அவற்றுக்கான ஆங்கில அர்த்தங்களை மிகவும் அசாத்தியமாக கூறுகின்றார்.

தந்தை முச்சக்கர வண்டி ஓட்டுனராகவும் தாயார் குடும்ப பெண்ணகவும் கொண்ட பெரிய அளவிலால பின்புலங்கள் இல்லாத குடும்பத்தில் பிறந்த குறித்த குழந்தையானது இதுவரை ஏடு தொடக்கப்பாடாத நிலையில் இவ்வாறு அதிசிறந்த ஞாபக சக்தியை கொண்டுள்ளமை பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் யாழ் ஊடக அமையத்தில் இவ்விடயம் குறித்து ஊடக சந்திப்பொன்றை பெற்றோர் நேற்று நடத்தியிருந்தனர்.

குறித்த சிறுமியின் அசாத்திய திறனை வெளிக்கொண்டு வருவதுடன் அந்த ஆற்றலை உலக சாதனைப் புத்தகத்தில் பதியப்படுவதற்கான முயற்சியை பெற்றோர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This