ட்ரம்பின் மீள் வருகையும் ஐரோப்பிய நேட்டோ உறவும்

ட்ரம்பின் மீள் வருகையும் ஐரோப்பிய நேட்டோ உறவும்

டொனால்ட் ட்ரம்பின் வெற்றி அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளை மையப்படுத்திய பாதுகாப்புச் செலவுகள் மற்றும் அட்லாண்டிக் கடல் கடந்த உறவுகள் போன்றவற்றில் மாற்றுத் தன்மை கொண்ட மறுசிரமைப்புக்கு உட்படலாம் என்ற எதிர்பார்ப்பு உண்டு.

அதேநேரம் ரசிய – உக்ரெய்ன் போர், இஸ்ரேல் – காச போர் ஒரு பாதையில் வரக்கூடிய முடிவை எட்டக்கூடிய சாத்தியப்பாடுகளும் இல்லாமலில்லை.

பலஸ்ரிக் நாடுகள் (Baltic States) அதாவது எஸ்டோனியா, லாட்வியா மற்றும் லித்துவேனியாவை உள்ளடக்கிய புவிசார் அரசியல் சொல்.

இந்த மூன்று நாடுகளும் நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம், யூரோ மண்டலம், ஐரோப்பிய பேரவை மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (Organisation for Economic Co-operation and Development -(OECD) ஆகியவற்றின் உறுப்பினர்களாக உள்ளன.

இந்த பலஸ்ரிக் நாடுகளுடன் ட்ரம் உறவை பலப்படுத்தலாம்.

போலந்து மற்றும் பலஸ்டிக் நாடுகள் போன்ற சில நேட்டோ உறுப்பு நாடுகள் தற்போது நல்ல நிலையில் உள்ளன, பொருளாதாரத்தை மையப்படுத்திய ஐரோப்பிய தன்னம்பிக்கை சில காலத்திற்கு பாதுகாப்பு செலவினங்களை அதிகரித்துமிருந்தன.

அமெரிக்காவில் குடியரசுக் கட்சியும் ஜனநாயகக் கட்சியும் முரண்பாடுகளுக்கு அப்பால் தங்களை நிர்வாகங்களின் திறமையான பங்காளிகளாக நிரூபிக்கின்றன. அதேநேரம் பிரான்ஸும் ஜேர்மனியும் அரசியல் முரண்பாட்டுக்குள் சிக்கியுள்ளன.

ஆனால் அமெரிக்கத் தேர்தலுக்கு அடுத்த நாளே ஜேர்மனியின் பலவீனமான கூட்டணி அரசாங்கத்தின் சரிவு ஐரோப்பாவைப் பொறுத்தவரை ட்ரம்பின் மீள் வருகை பற்றிய விழிப்புணர்வை ஊட்டியுள்ளது. ஆனாலும் எச்சரிக்கையுடனும் நோக்கப்படுகிறது.

ஜே பைடனின் சில பலவீனங்களும் நிர்வாகச் சிக்கல்களும் ட்ரம்பின் மீள் வருகயில் மாற்றுத் தன்மையுடைய இயல்பு ஒன்றுக்குக் காரணம் என்று கூறினாலும் ட்ரம்ப் ஒரு ஒழுங்கத்திற்கு உட்பட்டவரல்ல என்று கருத்தும் உண்டு. ஆனால் அமெரிக்க அரசியலின் ஆழமான அம்சத்தின் பிரதிநிதியாகவும் ட்ரம் நோக்கப்படுகிறார்.

ட்ரம்பின் முன்னைய ஆட்சியில் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனின் நேட்டோவின் செயற்பாடுகளை விமர்சிக்கும்போது, நோட்டோவின் மூளை இறந்துவிட்டதாகக் குற்றம் சுமத்தியிருந்தார். ஆனால் ட்ரம்பின் மீள் வருகை நோட்டோ பற்றிய மறுசீரமைப்பையும் சுட்டிக்காட்டுகிற என்ற கருத்தும் உண்டு.

அத்துடன்; உக்ரெய்ன் எதிர்காலம் சந்தேகத்திற்கு இடமின்றி பைடன் நிர்வாகத்தின் கீழ் இருந்ததை விட மிகவும் ஆபத்தானதாக இருந்தாலும், ட்ரம்பின் மீள் வருகையை உக்ரெய்ன் வரவேற்கலாம் என தி எகனாமிஸ்ட் நாளிதழில் வெளியான கட்டுரை வாதிட்டுள்ளது.

மேலும் சில உள்நாட்டு அமைச்சரவை பதவிகள் சர்ச்சையைத் தூண்டியிருந்தாலும், உக்ரெய்ன் – ரசியா மோதலுக்கு சிறப்புத் தூதராக கீத் கெல்லாக்கை ட்ரம்ப் தேர்ந்தெடுத்தமை வரவேற்கப்படுகின்றது.

மார்கோ ரூபியோ தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டதிலும் முன்னேற்றங்கள் உண்டு.

ஜே பைடனின் நிர்வாகம் சொல்லாட்சி ரீதியாக நம்பிக்கையுடன் இருந்தது, ஆனால் உக்ரெய்னில் மூலோபாய ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் எச்சரிக்கையாக இருந்தது.

ஆனாரல் ட்ரம்பின் கீழ் உக்ரெயன் ரசியாவிடம் சரணடையாமல் மீண்டும் ஒருங்கிணைக்க ஒரு வாய்ப்பு உள்ளது, உக்ரெய்னை நேட்டோ கூட்டணிக்கு கொண்டு வருவதற்கு அளவிட முடியாத பலம் கொண்ட பெருமைமிக்க ஐரோப்பிய தேசமாக அதன் மதிப்புகள் மற்றும் அடையாளத்திற்கு உண்மையாக இருக்கக் கூடிய செயல் முறை வியூகங்களும் வகுக்கப்படுகின்றன.

ஆனால் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் டொனால்ட் ட்ரமப்புக்கு சவால் மிக்கவராக மாறகக்கூடிய ஏது நிலை பற்றி சர்வதேச ஊடகங்கள் விமர்சிக்கின்றன.

ஏனெனில் ட்ரம்பின் 2016- 2020 கால முதலாவது ஆட்சியில் நேட்டோவுக்குள் ட்ரம்பின் பல யோசனைகளுக்கு ட்ரம் நேரடியாக எதிர்ப்பு வெளியிட்டிருந்தார்.

மக்ரோன் 2017 ஆம் ஆண்டு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து ஐரோப்பிய மூலோபாய சுயாட்சி ஒரு நிகழ்ச்சி நிரலாக இருந்து வருகிறார். அந்த நிகழ்ச்சி நிரல் பல்வேறு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு வெவ்வேறு வியூங்களைக் குறிக்கும் ஒரு சிக்கலான யோசனையாகவும் அமைந்திருந்தன.

மக்ரோனைப் பொறுத்தவரை, உலக அரங்கில் ஒரு புவிசார் அரசியல் பங்காளராக இல்லாமலும் அமெரிக்காவைச் சாராமல் ஐரோப்பா சுதந்திரமாகச் செயல்படுவதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்ற பிரதான இலக்குடன் இயங்கி வருகிறார்.

ஆனால் ட்ரம்பின் மீள் வருகையின் பின்னர் மக்ரோன் இன்னும் எத்தனை காலத்திற்குப் பிரான்ஸ் ஜனாதிபதியாக இருக்கப் போகிறார் என்பதும் கேள்விதான்

2028 இல் ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலம் முடிவடையும் போது ஐரோப்பா எப்படி இருக்கும் என்று கணிப்பது மிகவும் கடினம். மக்ரோன் போன்ற தலைவர்கள் சர்வதேச அரசியல் – பொருளாதார மேடையை விட்டு வெளியேறியிருப்பார்கள், உக்ரெயன் இன்னும் அதன் உயிர் வாழ்விற்காக போராடிக்கொண்டிருக்கலாம். அல்லது நடுநிலைமைக்கு கட்டுப்பட்டிருக்கலாம்.

மேலும் எதிர்பாராத மோதல்களும் வெளிப்படலாம். ஆகவே ஐரோப்பிய ஒற்றுமைத் தொனி அமெரிக்கச் சார்புடன் சேரகக்கூடிய வாய்ப்பையும் தோற்றுவிக்கலாம்.

தப்போதைக்கு, அமெரிக்க ஐரோப்பிய உறவு மற்றும் அதன் சொந்த அணிகளுக்குள் இருந்து கணிக்க முடியாத அளவிற்கு மாற்றுத் தன்மைக்கு அதாவது ட்ரம்புடன் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்ற தவிர்க்க முடியாத சூழ்நிலைக்குத் தயாராக்கூடிய வாய்ப்புகள் விஞ்சியுள்ளன.

பூகோள அரசியல் ரீதியாக சுதந்திரமான செயற்பாட்டாளர்களாக இயங்கும் ஐரோப்பாவின் திறனை மட்டுமல்ல, அமெரிக்க ஐரோப்பிய உறவுக்கு எதிரான வியுகங்களை வகுக்கும் ரசிய – சீனா போன்ற ஏனைய பலம்பொருந்திய சர்வதேச நாடுகளின் வியூகங்களைத் தகர்க்கக்கூடிய வல்லமை ட்ரம்பிடம் உண்டு என்ற அவதானிப்புடன் செயற்பட வேண்டிய முன் எச்சரிக்கையும் உண்ட

Share This