ட்ரம்பின் ஆசை – அமெரிக்கா, ஐரோப்பா போரை உருவாக்கும் அபாயம்

கிரீன்லாந்தில் இன்று நாடளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் கிரீன்லாந்து மீது அமெரிக்கா நேரடி போருக்கு தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் அண்டை நாடாக டென்மார்க் உள்ளது. டென்மார்க்கின் ஒருபகுதியாக கிரீன்லாந்து உள்ளது. இது டென்மார்க்கின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற பிரதேசமாகும். இந்நிலையில் கிரீன்லாந்தை கைப்பற்ற போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறிவருவதால் அங்கு போர் நடத்த வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறு இருப்பினும் கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்கா போர் தொடுத்தால் அது மாபெரும் போராக மாறலாம். ஏனெனில் கிரீன்லாந்தை உள்ளடக்கிய டென்மார்க் நாடு என்பது நேட்டோவில் உறுப்பினராக உள்ளது. நேட்டோவில் மொத்தம் 29 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதில் அமெரிக்காவும் ஒன்று. ஆனால் நேட்டோவில் இருந்து அமெரிக்கா வெளியேற உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் கூறி வருகிறார். இவ்வாறான சூழலில் அமெரிக்கா, கிரீன்லாந்தில் போர் தொடுத்தால் நிச்சயம் நேட்டோ உறுப்பு நாடுகள் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும்.
ஏனெனில் நேட்டோவின் விதியின்படி அதில் உறுப்பினராக உள்ள நாட்டின் மீது யாராவது போர் தொடுத்தால் நேட்டோ நாடுகள் ஒன்றிணைந்து பதிலடி கொடுக்க வேண்டும். இதனால் அமெரிக்கா கிரீன்லாந்து மீது போரை தொடங்கும் பட்சத்தில் அது ஐரோப்பா – அமெரிக்கா இடையேயான போராக மாறலாம்.
நேட்டோவில் ஐரோப்பிய நாடுகள் தான் அதிகம் உள்ளன. ஏற்கனவே உக்ரேன் மீதான ரஷ்யா போர் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் காணப்படுகின்றது. இந்நிலையில் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்கா, கிரீன்லாந்தில் போரை தொடங்கினால், நிச்சயம் அமெரிக்கா – ஐரோப்பிய நாடுகள் இடையே போர் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சர்வதேச அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.