இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்படுவதாக ட்ரம்ப் தெரிவிப்பு

இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதை பெரும்பாலும் நிறுத்திவிட்டதாக கூறிய ட்ரம்ப் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தன்னை அழைத்தால், 2026 ஆம் ஆண்டில் இல் இந்தியா வருவேன் என்றும் கூறியுள்ளார்..
மேலும், மோடியை தனது நண்பர் மற்றும் சிறந்த மனிதர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக இந்தியா–அமெரிக்க உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இரு நாடுகளுக்கிடையிலா உறவு வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
