ஹிருணிகா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

குருந்துவத்த பொலிஸ் பிரிவில் வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் 15 சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கை டிசம்பர் மாதம் 08 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்போது, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிந்துவிட்டதாகவும், அறிக்கைகள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குருந்துவத்த பொலிஸ் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
அதன்படி, வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் குறித்து நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு பொலிஸ் பிரிவினருக்கு அறிவுறுத்தினார்.
2023 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் தெரு நாடகம் ஒன்றை ஏற்பாடு செய்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் பிற சந்தேக நபர்களுக்கு எதிராக பொலிஸார் இந்தமுறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.