இலங்கையின் வளர்ச்சித் திட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குவதாக சீனா உறுதி

இலங்கையின் வளர்ச்சித் திட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குவதாக சீன வெளியுறவு அமைச்சர், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவிடம் வலியுறுத்தினார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் டில்வின் சில்வா சீனாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது அவர் சீன வெளியுறவு அமைச்சர் லியூ ஜின்தாவோ உள்ளிட்ட உயர் அதிகாரிகளையும் சந்தித்தார்.
இந்த சந்திப்பு நாட்டின் வெளியுறவுத் துறையின் தலைமையகத்தில் நடைபெற்றது.
சீனாவும் இலங்கையும் எட்டப்பட்ட புரிந்துணர்வுக்கு ஏற்ப செயற்படும் என டில்வின் சில்வா கூறினார்.
இந்தக் கலந்துரையாடலில் சீன பிரதி வெளியுறவு அமைச்சர் , மற்றும் பிரதி அமைச்சர்கள் எரங்க குணசேகர முனீர் முலாஃபர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு கலந்து கொண்டது.