
தேசபந்துவை பதவிநீக்கம் செய்வது தொடர்பில் விசாரிக்க மூவர் கொண்ட குழு
இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவிநீக்கம் செய்வது தொடர்பிலான விசாரணைகளுக்காக
மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
நீதியரசர் நீல் இத்தவெல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுத் தலைவர் லலித் ஏக்கநாயக்க ஆகியோர் இந்த குழுவின் ஏனைய உறுப்பினர்கள்
ஆவர்.
CATEGORIES இலங்கை
