காலி, சீனிகம பகுதியில் போதைப்பொருளுடன் மூவர் கைது

காலி, சீனிகம பகுதியில் போதைப்பொருளுடன் மூவர் கைது

காலி, சீனிகம பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே தெல்வல பிரதேசத்தில் சந்தேகநபர்கள் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 3 கிலோ கிராம் இற்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share This