ரணில் நாடாளுமன்ற உறுப்பினராக இதுவே சிறந்த தருணம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்திற்கு நுழைவதற்கு இதுவே சிறந்த தருமணம் என தான் நம்புவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த தெரிவித்துள்ளார்.
மேலும், ரணில் விக்கிரமசிங்க ஒரு சிறந்த ஜனநாயகவாதி என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், சிலிண்டர் சின்னத்திற்கு அளிக்கப்பட்ட அனைத்து வாக்குகளும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மக்களால் அளிக்கப்பட்டவை.
எனவே, தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் பதவி விலகி, எதிர்காலத்தில் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
இந்நிலையில், அரசியலமைப்பு ஏகபோகத்தை தோற்கடிக்க ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கம் ஒரு பாசிச ஆட்சியை நோக்கி நகர முயற்சிக்கும் இந்த நேரத்தில், அனைத்துக் கட்சிகளும் அதற்கு எதிராகச் செயல்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், ஒரு நாட்டில் ஒரு ஜனநாயகக் கட்சியின் தலைவர் சிறையில் அடைக்கப்படும்போது ஆதரவாளர்கள் இப்படி நடந்துகொள்வது இயல்பானது என்றும் கூறியுள்ளார்.
இந்த நேரத்தில் தனது கட்சி உட்பட மற்ற அனைத்து கட்சிகளும் ஒன்றுபடுவதற்கு பொதுவான காரணி, நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தலைத் தடுப்பதாகும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.