திலினி பிரியமாலி கைது

கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் திலினி பிரியமாலி ஹோமாகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோமாகம நீதிமன்றத்தில் கடமையில் இருந்த நிதி அதிகாரியின் கடமையைத் தடுத்தது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஹோமாகம தலைமையக பொலிஸில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு ஹோமாகம நீதவான் முன்னர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதன்படி, இன்று காலை ஹோமாகம தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.