படகுகளிலிருந்து  பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 1,000 கோடி ரூபா

படகுகளிலிருந்து  பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 1,000 கோடி ரூபா

இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில், 02 நெடுநாள் மீன்பிடி படகுகளிலிருந்து  பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 1,000 கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்து 600 கிலோகிராமிற்கும் அதிகமான
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

தெற்கு பிராந்தியத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட கடற்படை நடவடிக்கையின் போது போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இதன்போது 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இரண்டு படகுகளும் இன்று அதிகாலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய மாதங்களில் கடல்சார் போதைப்பொருள் பறிமுதல் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.

 

CATEGORIES
TAGS
Share This