தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு மூன்றாவது  நாளாகவும் தொடர்கிறது…

தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு மூன்றாவது  நாளாகவும் தொடர்கிறது…

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று மூன்றாவது  நாளாகவும் தொடர்கின்றது.

தபால் ஊழியர்கள் முன்வைத்த 19 கோரிக்கைளில் 17 கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், சில கோரிக்கைகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் தபால் மாஅதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார்.

மேலதிக நேர கொடுப்பனவு மற்றும் கைவிரல் அடையாளத்தை பதிவு செய்தல் ஆகிய இரண்டும் அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த 2 விடயங்களும் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய தபால் பரிமாற்றகத்தின் சில அலுவலகங்களே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தபால் மாஅதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார்.

தொழிற்சங்கங்கள் தவறான நேரத்தில் தவறான வழிமுறையைத் தெரிவு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

Share This