எதிர்காலத்தில் அரிசி தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம்
அரிசியை இறக்குமதி செய்யும் போது ஒரு கிலோவுக்கு 65 ரூபாய் வரி அறவிடப்படுவது மற்றும் அரிசியை இறக்குமதி செய்வதற்கு போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தினால் பல உணவு இறக்குமதியாளர்கள் அரிசியை இறக்குமதி செய்யாமலிருக்க தீர்மானித்துள்ளனர்.
ஒரு கிலோ அரிசியை இறக்குமதி செய்யும் போது 65 ரூபாய் வரி அறவிடப்படுவதால், நாட்டு அரிசி கிலோ ஒன்றை இறக்குமதி செய்ய 210 ரூபாய் செலவாகும் எனவும், இதன் காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட நாட்டு அரிசி கிலோ ஒன்றை 220 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியாது எனவும் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, அரிசி இறக்குமதிக்காக அரசாங்கம் இம்மாதம் 20ஆம் திகதி வரையிலேயே காலஅவகாசம் வழங்கியள்ளதாகவும், அந்த காலஅவகாசம் போதாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசித் தொகையானது இந்திய துறைமுகத்தில் இருந்து கப்பல்களுக்கு அரிசி கையிருப்பு ஏற்றப்படும் போது 10ஆம் திகதி அல்லது அதை விட ஓரிரு நாட்கள் தாமதமாகும் எனவும் அவ்வாறான ஒரு சூழலில் ஒருபோதும் 20ஆம் திகதியாகும் போது அரிசியை இறக்குமதி செய்ய முடியாது என அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சிக்கல்நிலை காரணமாக பல இறக்குமதியாளர்கள் பலர் அரிசி இறக்குமதிக்கு தயக்கம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்காரணமாக, எதிர்காலத்தில் அரிசி தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் மற்றும் அரிசி விலையானது அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.