தேஷபந்து விவகாரம் – விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம்  சபாநாயகரிடம்

தேஷபந்து விவகாரம் – விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம்  சபாநாயகரிடம்

பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் விவகாரம் தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம்  சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அறிக்கையை தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேஷபந்து தென்னகோன் மீது சுமத்தப்பட்டுள்ள தவறான நடத்தை மற்றும் கடுமையான அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை  சமர்ப்பிக்க  நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு அண்மையில் சாட்சியமளிப்பு பணியை நிறைவு செய்தது.

உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன இந்தக் குழுவின் தலைவராக உள்ளதுடன் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி நீல் இத்தவால மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஈ.டபிள்யூ.எம். லலித் ஏக்கநாயக்க ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்கள் ஆவர்

CATEGORIES
TAGS
Share This