சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 17 லட்சத்தை கடந்தது

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 17 லட்சத்தை கடந்தது

கடந்த செப்டம்பர் மாதத்தில் 158,971 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில்
செம்டம்பரில் 30.24 வீத அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செப்டம்பர் மாதத்தில் இந்தியாவிலிருந்து மாத்திரம் 49,697 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

அத்துடன் கடந்த செப்டம்பர் மாதத்தில் பிரித்தானியாவில் இருந்து 10,527 பேரும், ஜெர்மனியிலிருந்து 9,344 பேரும்,
சீனாவிலிருந்து 10,527 பேரும் மற்றும் பிரான்சிலிருந்து 5,144 பேரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.

இதற்கமைய, இந்த ஆண்டின் ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி, வரையான காலப்பகுதியில்
வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 17 லட்சத்து 25 ஆயிரத்து 494 ஆக பதிவாகியுள்ளது.

இவர்களில் 375,292 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தும், 122,144 பேர் ரஷ்யாவிலிருந்தும், 161,893 பேர் பிரித்தானியாவில் இருந்தும் வருகை தந்ததாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This