கடந்த 10 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 80,000 ஐ அண்மித்தது

நாட்டிற்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த மாதத்தின் கடந்த 10 நாட்களில், 77 ஆயிரத்து 482 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகைத்தந்துள்ளனர்.
அத்துடன் பிரித்தானியா, இத்தாலி, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்தும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.
இதற்கமைய இந்த வருடத்தில் நாட்டிற்கு வருகைத்த தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 லட்சத்து 45 ஆயிரத்து 770 ஆக அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.