ஜூன் மாதத்தின் முதல் 10 நாட்களில், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 40,000 ஐ கடந்தது

ஜூன் மாதத்தின் முதல் 10 நாட்களில், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 40,000 ஐ கடந்தது

நாட்டிற்கு வருகைத் தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஜூன் மாதத்தின் முதல் 10 நாட்களில் 43,962 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த ஆண்டின் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,073,765 ஆகும்.

பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

 

Share This