முப்படைகளிலிருந்து சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்யாது கைதானவர்களின் எண்ணிக்கை 3000 ஐ அண்மித்தது

முப்படைகளிலிருந்து சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்யாது கைதானவர்களின் எண்ணிக்கை 3000 ஐ அண்மித்தது

முப்படைகளில் இருந்து சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்யாத 2,983 இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம் 30 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஆகும்.

இதன்படி, 2,261 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடற்படையைச் சேர்ந்த 194 பேரும் விமானப் படையைச் சேர்ந்த 198 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Share This