சர்வதேச சிறுவர் தினத்தில் பறிபோன குழந்தையின் உயிர்

சர்வதேச சிறுவர் தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், வீட்டின் பின்புறம் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து நான்கு வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இஹல போமிரியவைச் சேர்ந்த சேனுகா நில்ஷான் ஹெட்டியாராச்சி (4) என்ற குழந்தையே உயிரிழந்துள்ளார்.
வீட்டின் பின்புறம் உள்ள கிணறு வலையால் மூடப்பட்டிருந்தாலும், பெரியவர்களின் கவனமின்றி குழந்தை அதில் விழுந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த சிறுவன், நேற்று பாலர் பள்ளிக்குச் சென்று சிறுவர் தின கொண்டாட்டத்தில் பங்கேற்று, பரிசுகளைப் பெற்று, வீடு திரும்பியபோது இந்த விபத்தை சந்தித்ததாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.