வடக்கு அயர்லாந்தில் கருப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனைகள் தொடர்பான பிரச்சனை – மேலும் வெளியாகவுள்ள அறிக்கைகள்

வடக்கு அயர்லாந்தில் தெற்கு சுகாதார அறக்கட்டளையின் கருப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனைகள் தொடர்பான பிரச்சனை குறித்து இன்னும் சில அறிக்கைகள் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைகள் வெளிவந்த பின்னர், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சில தெளிவு கிடைக்கும் என பிரச்சாரக் குழுவின் உறுப்பினர் ஹீதர் தாம்சன் கூறினார்.
ஹீதர் தாம்சன், “லேடீஸ் வித் லெட்டர்ஸ்” என்ற குழுவைச் சேர்ந்தவர்.
அவர், இந்த சேவையில் ஊழல் இடம்பெற்றது என குற்றம் சுமத்தி பொது விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த பிரச்சனை காரணமாக, சுமார் 17,500 பெண்கள் தங்கள் கருப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை முடிவுகளை மீண்டும் சரிபார்க்க வேண்டியிருந்தது.
அறக்கட்டளையின் மதிப்பாய்வில், எட்டு பெண்களின் பரிசோதனை மாதிரிகள் சரியாக ஆய்வு செய்யப்படவில்லை என்பதால் அவர்கள் புற்றுநோய்க்கு ஆளானமை தெரியவந்தது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அறக்கட்டளை கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தைப் பெற்றவர்களில் ஹீதர் தாம்சனும் ஒருவர்.
