மனைவியைக் கொலை செய்து குக்கரில் வேக வைத்த கணவர்
ஐதரபாத்தைச் சேர்ந்த குருமூர்த்தி என்பவர் அவரது மனைவியை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி ப்ரஷர் குக்கரில் வேக வைத்து ஏரியில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓய்வுப் பெற்ற இராணுவ வீரரான குருமூர்த்தி செக்யூரிட்டியாக தொழில் புரிந்து வருகின்றார்.
குருமூர்த்தியின் மனைவியான மாதவியை கடந்த 18 ஆம் திகதியிலிருந்து காணாததால் அவரது பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
விசாரித்து பார்த்ததில் மனைவியை கொலை செய்ததை குருமூர்த்தி ஒப்புக் கொண்டார்.
அவர் கூறியதாவது, மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த குருமூர்த்தி மனைவியை கொலை செய்து தடயங்களை அழிப்பதற்காக அவரது உடலை குளியலறையில் வைத்து துண்டு துண்டாக வெட்டி, ப்ரஷர் குக்கரில் வேக வைத்ததை ஒப்புக் கொண்டார்.
அதுமட்டுமின்றி மனைவியின் எலும்புகளை உரலில் போட்டு இடித்து மீண்டும் வேகவைத்து எல்லாவற்றையும் சாக்கு மூட்டையில் கட்டி ஏரியில் போட்டுவிட்டதாகக் கூறினார்.
குறித்த ஏரியில் மோப்ப நாய்களின் உதவியுடன் மாதவியின் உடல் பாகங்களை தேடியும் எதுவும் கிடைக்காததால் தேடுதல் வேட்டை தொடர்ந்து வருகின்றது.
மனைவியை இவ்வாறு கொடூரமாகக் கொன்ற குருமூர்த்தியை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.