
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போராட்டம் நாளைய தினமும் தொடர்கிறது
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் தொடருவதாகவும், நாளை (05) அதன் மத்திய செயற்குழு கூடவுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்போது போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.
கோரிக்கைகளுக்கு முறையான தீர்வு கிடைக்காத பட்சத்தில், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தவுள்ளதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் நாட்டின் பல பகுதிகளில் வைத்தியசாலைகளின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
