ஒக்டோபரில் நாட்டின் உற்பத்தி மற்றும் சேவைகள் அதிகரிப்பு

ஒக்டோபரில் நாட்டின் உற்பத்தி மற்றும் சேவைகள் அதிகரிப்பு

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2025 ஒக்டோபரில் உற்பத்தி மற்றும் சேவைகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதலை காட்டுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

உற்பத்திக்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் கடந்த ஒக்டோபரில் 61.0 சுட்டெண் பெறுமதியைப் பதிவுசெய்து,
உற்பத்தி நடவடிக்கைகளில் அதிகரிப்பொன்றை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து துணைச் சுட்டெண்களும் வளர்ச்சிக்காக சாதகமாக பங்களித்து, இந்த அதிகரிப்பானது பரந்த அடிப்படையினைக் கொண்டு காணப்படுகின்றது.

பணிகளுக்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2025 ஒக்டோபரில் 66.0 சுட்டெண் பெறுமதியைப் பதிவுசெய்து, கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் சேவைகள் நடவடிக்கைகளில் விரிவடைதலை பதிவு செய்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Share This