மாவை சேனாதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்டது

மாவை சேனாதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்டது

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் புகழுடல் இன்று ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது.

உடல்நலக்குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில்
மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக புகழுடல் வைக்கப்பட்டிருந்தது.

இறுதிக்கிரியை நடைபெற்று, மாவிட்டபுரம் இந்துமயானத்தில் அன்னாரது பூதவுடல் இன்று தகனம் செய்யப்பட்டது.

அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பினர் , மத குருமார்கள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் , என பல்வேறு தரப்பினரும் இறுதி கிரியையில் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS
Share This