88 நபர்களின் சொத்துக்கள் முடக்கம்

88 நபர்களின் சொத்துக்கள் முடக்கம்

திட்டமிட்ட குற்றம் மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்ட 88 நபர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 26 பேர் திட்டமிட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதால், ஏனைய நபர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலம், வீடுகள், வங்கிக் கணக்குகள், வாகனங்கள், நகைகள், வணிக வளாகங்கள் மற்றும் நெல் வயல்கள் ஆகியவை முடக்கப்பட்ட சொத்துக்களில் அடங்கும் என்று  பொலிஸார் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This