உயர்தரப் பரீட்சை இன்றிரவு வெளியாகும்

2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வெளியாகுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகளை https:/www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதனூடாக பார்வையிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை உயர்தரப் பரீட்சைகள் இடம்பெற்றன.
பரீட்சையில் 333,158 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.