அமெரிக்காவில் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஐ கடந்தது

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஐ கடந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக டெக்சாஸ் மாநிலம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
குவாடலூப் நதிக்கரையில் அமைந்துள்ள கிறிஸ்தவ முகாமில் தங்கியிருந்த 27 குழந்தைகள் காணாமற் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
மேலும் பலர் காணாமற்போயுள்ள நிலையில் தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.