ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் – பாகிஸ்தான் தூதருக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் – பாகிஸ்தான் தூதருக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் தீவிரவாதிகளால் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கொழும்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்படி, கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதருக்கு எதிராக இந்திய வம்சாவளி சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.

மக்களைக் கொலை செய்வதன் மூலம் எந்த தீர்வையும் அடைய முடியாது என்றும், அதற்கு பதிலாக அனைவரும் சமாதானம், அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களைக் கட்டுப்படுத்தவும், நாட்டில் செயல்படும் பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒழிக்கவும் பாகிஸ்தானை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Share This