கொழும்பில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஐவர் படுகாயம்

கொழும்பில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஐவர் படுகாயம்

கொழும்பு – பொரளை, சஹஸ்புராவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் நேற்று (07) இரவு 8.40 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஸ்கூட்டரில் வந்த அடையாளம் தெரியாத இருவர் டி-56 துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share This