பாடசாலைகளுக்கான தவணை விடுமுறை – கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

பாடசாலைகளுக்கான தவணை விடுமுறை – கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன்படி, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்டம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி
முதல் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முதலாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை 2026.02.14 முதல் 2026.03.02 வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2026.03.03 செவ்வாய்க் கிழமை முதல் 2026.04.10 வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

இதனையடுத்து முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட விடுமுறை 2026.04.11 முதல் 2026.04.19 வரை வழங்கப்படவுள்ளது.

பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை 2026.04.20 முதல் 2026.07.24 வரை நடைபெறும்.

இதேவேளை, மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் 2026.07.27 திங்கட்கிழமை முதல் 2026.08.07 வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் என
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை 2026.08.08 திங்கட் கிழமை முதல் 2026.09.06 வெள்ளிக்கிழமை வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2026.09.07 முதல் 2026.12.04 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

Share This