கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் பதற்றம் – நீர்த்தாரை வாகனங்கள் தயார் நிலையில்

அடக்குமுறைக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தால் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நீதிமன்ற வளாகத்திற்குச் செல்லும் வீதி பாதுகாப்புப் படையினரால் மூடப்பட்டு, குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே உள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆனாலும் எதிர்க்கட்சி போராட்டக்காரர்கள் பொலிஸாரின் வீதித் தடைகளை உடைத்து நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய முயற்சித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனிடையே, பொலிஸ் நீர்த்தாரை வாகனங்கள், கலகத் தடுப்பு பொலிஸார் மற்றும் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.