வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி – தமிழக அரசு கடும் எதிர்ப்பு

வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி – தமிழக அரசு கடும் எதிர்ப்பு

வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணியை நிறுத்​தா​விட்​டால் தமிழக அரசி​யல் கட்சிகள் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்தில் வழக்கு தொடரப்​படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டா​லின் தலை​மை​யில் நேற்று இடம்பெற்ற அனைத்​துக் கட்சி கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் 1951 முதல் 2004ஆம் ஆண்டு வரை வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வாக்​காளர் பட்​டியலில் தகு​தி​யானவர்​கள் அனை​வரை​யும்  சேர்ப்​பது, உயி​ரிழந்​தவர்​கள், இடம்​பெயர்ந்​தவர்​கள், இரட்​டைப் பதிவு கொண்டவர்களின் பெயர்​களை நீக்​கு​வது ஆகிய​வற்றை நோக்​க​மாகக் கொண்டு இந்த பணி முன்னெடுக்கப்படுகின்றது.

2004ஆம் ஆண்டுக்கு பின்னர் அண்மையில் பிஹாரில் இப்​பணி நடை​பெற்​றது.

இந்நிரலையில், தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்​கம் உள்​ளிட்ட 12 மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​களில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணிகள் கடந்த 28ஆம் திகதி முதல் ஆரம்பமாகியுள்ளன.

இதற்கு தமிழக ஆளும் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. இந்நிலையிலேயே, முதலமைச்சர் தலைமையில் நேற்று அனைத்​துக் கட்சி கூட்​டம் சென்​னை​யில் நடைபெற்றது.

இதில் 49 கட்​சிகள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன்போது முதலமைச்சர் முன்மொழிந்த தீர்​மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணிக்கு நாட்​டின் பல்​வேறு கட்​சிகள் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றன.

மத்​திய அரசின் கைப்​பாவை​யாக, எதேச்​ச​தி​காரப் போக்​குடன் தேர்​தல் ஆணை​யம் செயல்​படு​வதை கண்​டிப்பதாக அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This