ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் நிறுத்தம்

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் நிறுத்தம்

கணினி தரவுத்தள கட்டமைப்பின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (21) முதல் நாளை மறுதினம் வரை ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் நிறுத்தி வைக்கப்படும் என தொழிலாளர் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

சேவைகளுக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு மே 23 ஆம் திகதி முதல் முன்னுரிமை அடிப்படையில் சேவைகள் மீண்டும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவைகள் இடைநிறுத்தப்பட்டமையால் ஏற்பட்ட அசௌகரிங்கள் குறித்து தொழிலாளர் ஆணையாளர் நாயகம்  கவலை வெளியிட்டுள்ளார்.

 

CATEGORIES
TAGS
Share This