
முச்சக்கர வண்டிகள் கொள்ளை சம்பவம் – தேடப்பட்டுவந்த நபர் கைது
முச்சக்கர வண்டி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த சந்தேக நபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய வெல்லம்பிட்டியவில் உள்ள சன்ஹிந்த செவன தொடர்மாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணையின் போது, வெல்லம்பிட்டிய மற்றும் களனி பொலிஸ் பிரிவுகளில் கொள்ளையிட்ட இரண்டு முச்சக்கர வண்டிகளையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
CATEGORIES இலங்கை
