திக்வெல்ல பகுதியில் நீச்சல் தடாகத்தில் வீழந்த மாணவன் உயிரிழப்பு

திக்வெல்ல பகுதியில் நீச்சல் தடாகத்தில் வீழந்த மாணவன் உயிரிழப்பு

மாத்தறை – திக்வெல்ல பகுதியில் நீச்சல் தடாகத்தில் வீழந்த மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மைதானத்தில் ஏனைய மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது, ​​ பாடசாலையில் அமைந்துள்ள
நீச்சல் தடாகத்தில் பந்து வீழ்ந்துள்ளது.

அதனை எடுக்க குறித்த மாணவன் முயற்சி செய்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

திக்வெல்ல விஜித மகா வித்தியாலயத்தில் 12 ஆம் வகுப்பில் கல்வி கற்று வந்த 17 வயதான பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் பதிகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து திக்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This