ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவின் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

நுவரெலியா – ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவின் விதிமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சமவெளி தேசிய பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக செயற்பட்ட 50 பேருக்கு எதிராக சம்பவ இடத்திலேயே 50,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் மலர்களின் அழகை பார்வையிடுவதற்காக ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவுக்கு பொதுமக்கள் வருகைத்தருகின்றனர்.
இதனால், பார்வையாளர்களுக்காக விசேட நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், விதிமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஹோட்டன் சமவெளி நிர்வாகம் அறிவித்துள்ளது.