
இராணுவத்திலிருந்து விலகியவர்களை பொலிஸ் சேவையில் இணைக்க நடவடிக்கை
இராணுவத்தில் பணியாற்றிவிட்டு சட்டரீதியாக பதவி விலகிய 45 வயதுக்கு குறைவான 10,000 பேரை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டு வருகிறது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தம்புத்தேகம பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைத் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து வௌியிடும் போது, இவர்களை 05 வருட காலத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்தார்.
CATEGORIES இலங்கை
