இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் – பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை

இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் – பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை

இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்வதாக பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கை மீது விதித்த வரியின் உண்மையான விகிதம், தற்போது 90 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா விதித்துள்ள வரி 44 சதவீதம் அல்ல எனவும் அது 54 சதவீதம் என்றும், இந்த சூழ்நிலையில் பொருளாதாரம் கடுமையான ஆபத்தில் உள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலையில், ஜனாதிபதி அநுரகுமார தனது அனைத்து வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு உள்ளூராட்சித் தேர்தல்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும், அமைச்சரவை ஓய்வெடுப்பதிலும், உடல் நலம் தேறுவதிலும் மும்முரமாக இருப்பதாகவும், அதே நேரத்தில் மற்ற நாடுகள் வளர்ந்து வரும் உலகளாவிய வர்த்தகப் போரினால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதில் கவனம் செலுத்துவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், புதிய வரி விகிதம், இலங்கை ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா விதித்த 10 சதவீத அடிப்படை வரிக்கு கூடுதலாகும் என்றும், மொத்த வரி விகிதம் 54 சதவீதமாக இருக்கும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்த நெருக்கடியிலிருந்து நிவாரணம் பெற அமெரிக்காவிற்கு ஒரு துணை நிதியமைச்சர் அனுப்பப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்தாலும், ஆபத்தை நிர்வகிக்க இது போதுமானதாக இல்லை என்று அவர்கள் கருதுகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This