குவைத்தில் இலங்கைப் பெண் ஒருவர் மர்மமான முறையில் படுகொலை

குவைத்தில் இலங்கைப் பெண் ஒருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெண்ணின் மரணம் குறித்த காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதுடன், பெண் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலைக்கான காரணங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.