2025 உலக தடகளக் கண்டெண்டல் டூர் – இலங்கைக்கு 05 பதக்கங்கள்

இந்தியாவில் நடைபெற்ற 2025 உலக தடகளக் கண்டெண்டல் டூர் போட்டியில் இலங்கை அணி மொத்தம் ஐந்து பதக்கங்களை வென்றது.
இதன்படி, இலங்கை அணி 02 தங்க பதக்கங்களையும் 02 வெள்ளி பதக்கங்களையும் ஒரு வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளது.
ஆண்களுக்கான 400 மீற்றர் ரிலே மற்றும் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
ரிலேவில் கல்ஹார இந்துபா, சதேவ் ராஜகருணா, ஒமெல் சச்சிந்தா மற்றும் மினோல் இனேஷ் திஸ்மிதா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் ருமேஷா தரங்கா இரண்டாவது தங்கப் பதக்கத்தை பெற்றார்.
ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தில் சாமோத் யோதசிங்க வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றதுடன் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் நதீஷா தில்ஹானி லெகம்கே மற்றொரு வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் சுமேதா ரணசிங்க வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.