வளர்ச்சியைப் பதிவு செய்த இலங்கை பொருளாதாரம்

வளர்ச்சியைப் பதிவு செய்த இலங்கை பொருளாதாரம்

இலங்கைப் பொருளாதாரம் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 4.9 சதவீத நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இன்று (15) வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாகப் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நேர்மறையான பொருளாதார வளர்ச்சி, பொருளாதார மந்தநிலையிலிருந்து தொடர்ந்து மீள்வதை எடுத்துக்காட்டுகிறது.

ஒப்பீட்டளவில் குறைந்த வட்டி விகிதங்களுடன் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம், பயணிகள் போக்குவரத்து’, ‘நிதி சேவை நடவடிக்கைகள்’, பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிகள் போன்ற முக்கிய பொருளாதார நடவடிக்கைகளே பொருளாதாரம் வளர்ச்சிக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

Share This