கட்டுமானப் பணிகளுக்காக இஸ்ரேலுக்கு சென்ற இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு

கட்டுமானப் பணிகளுக்காக இஸ்ரேலுக்கு சென்ற இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு

இஸ்ரேலில் 38 வயதான இலங்கை தொழிலாளர் ஒருவர் வியாழக்கிழமை (13) இரவு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலியைச் சேர்ந்த குறித்த நபர் இரண்டு மாதங்களுக்கு முன்பு கட்டுமானப் பணிகளுக்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த மரணம் குறித்து இஸ்ரேல் பொலிஸின் இன்டர்போல் கிளை தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உயிரிழந்தவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This