ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி –  பல பதக்கங்களைத் தன்வசப்படுத்தியது இலங்கை

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி – பல பதக்கங்களைத் தன்வசப்படுத்தியது இலங்கை

சவுதி அரேபியாவில் நடைபெற்றுவரும் 18 வயதுக்குட்பட்டோருக்கான ஆறாவது ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை பல பதக்கங்களை வென்றுள்ளது.

இதன்படி, மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த தருஷி அபிஷேகா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

அவர் போட்டி தூரத்தை 2 நிமிடம் 14 செக்கன்களில் நிறைவு செய்துள்ளார்.

மேலும் ஆடவருக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த சவிந்து அவிஷ்க வெண்கலப் பதக்கம் வென்றதுடன் அவர் போட்டி தூரத்தை ஒரு நிமிடம் 53 செக்கன்களில் நிறைவு செய்தார்.

அத்துடன் முப்பாய்ச்சல் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த தில்கி நெஹாரா வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஆடவருக்கான உயரம் பாய்தல் போட்டியில் நெத்யா சம்பத் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )