இலங்கை திரிபோஷா லிமிடெட் நிறுவனத்திற்கு புதிய தலைவர்

இலங்கை திரிபோஷா லிமிடெட் நிறுவனத்திற்கு புதிய தலைவர்

உள்ளூர் மற்றும் சர்வதேச வணிகத் துறைகளில் விரிவான அனுபவமும் நிபுணத்துவமும் கொண்ட அமல் நிரோஷன அத்தநாயக்கவை இலங்கை திரிபோஷா லிமிடெட்டின் புதிய தலைவராக நியமிக்க சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சில், அமல் நிரோஷன அத்தநாயக்கவிடம் இன்று செவ்வாய்க்கிழமை இது தொடர்பான நியமனக் கடிதம் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் வழங்கப்பட்டது.

 

Share This