இலங்கை – பாகிஸ்தான் மூன்றாவது மற்றும் இறுதி  ஒருநாள் கிரிக்கெட் போட்டி – அசலங்க, வனிந்து வெளியேற்றம்

இலங்கை – பாகிஸ்தான் மூன்றாவது மற்றும் இறுதி  ஒருநாள் கிரிக்கெட் போட்டி – அசலங்க, வனிந்து வெளியேற்றம்

இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி  ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இந்தப் போட்டி பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 03 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

காய்ச்சல் காரணமாக அணித் தலைவர் சரித் அசலங்க இன்றைய போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

அவருக்குப் பதிலாக குசல் மெந்திஸ் இன்றைய போட்டியில் தலைவராகக் கடமையாற்றுவார்.

மேலும், வனிந்து ஹசரங்க காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது. இளம் வீரர் பவன் ரத்நாயக்க இன்று ஒருநாள் போட்டியில் அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This