இலங்கை அணிக்கு 176 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

சுற்றுலா இலங்கை அணிக்கும் சிம்பாப்வே அணிக்கும் இடையிலான முதலாவது 20 க்கு 20 கிரிக்கட் போட்டி இன்று நடைபெறுகிறது.
ஹராரே மைதானத்தில், இலங்கை நேரப்படி இன்று மாலை 05 மணிக்கு போட்டி ஆரம்பமானது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதற்கமைய, இலங்கை அணிக்கு 176 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே, இரண்டு அணிகளுக்கும் இடையிலான சர்வதேச ஒருநாள் போட்டித்தொடரில் இலங்கை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற நிலையில், இன்று 20க்கு20 போட்டிகளில் பங்கேற்கிறது.
இந்தநிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி செப்டம்பர் 06ஆம் திகதியும் மூன்றாவதும் இறுதியுமான போட்டி செப்டம்பர் 07ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன.