இந்திய மீனவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
இலங்கை – இந்திய மீனவப் பிரச்சினை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
எல்லைத் தாண்டி மீன் பிடிக்கின்றமையால் மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமையும் அவர்களது விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றமையும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் எல்லை தாண்டி மீன்படித்த காரணத்தினால் தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதோடு அவர்களிடமிருந்து ஒரு விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாகையிலிருந்து மீன் பிடிக்கச் சென்றவர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர்.
காரை நகரில் கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.